செய்திகள்
கோவை அருகே என்ஜினீயரிங் மாணவர் லாரி மோதி பலி
கோவை அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார்
கோவை:
உடுமலையை சேர்ந்தவர் சின்னசாமி. அரசு பஸ் கண்டக்டர். இவரது மகன் திருப்பதி ராஜா (வயது 22). இவர் கோவை மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தங்கி இறுதியாண்டு படித்து வந்தார்.
நேற்று இரவு திருப்பதி ராஜா தன்னுடன் படித்து வரும் சிவசக்தியுடன் (22) ஓட்டலில் சாப்பிட சென்றார். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் விடுதிக்கு திரும்பி கொண்டிருந்தனர்.
அப்போது செட்டிபாளையம் எல் அண்ட் டி பைபாஸ் ரோட்டில் சென்ற போது அந்த வழியாக வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் திருப்பதி ராஜா பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சிவசக்தி காயம் அடைந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் சிவசக்தியை மீட்டு கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து பற்றி கோவை மேற்கு போக்கு வரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகிறார்கள்.