செய்திகள்

புதுவையில் பாகிஸ்தான் கொடியை எரித்து பாரதிய ஜனதாவினர் போராட்டம்

Published On 2016-09-19 09:26 GMT   |   Update On 2016-09-19 09:26 GMT
காஷ்மீரில் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவையில் பாரதிய ஜனதாவினர் பாகிஸ்தான் கொடியை எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள். 17 இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். ஏராளமான பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புதுவை பாரதிய ஜனதா கட்சி சார்பில் ராஜா தியேட்டர் சந்திப்பில் இன்று காலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். முன்னாள் மாநில தலைவர்கள் கேசவலு, தாமோதர், துணைத்தலைவர் செல்வம், வர்த்தகஅணி ரவிச்சந்திரன், நிர்வாகிகள் மோகன்கமல் உள்ளிட்டோர் பலர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த பாகிஸ்தான் கொடியை தீயிட்டு கொளுத்தினர். இதையடுத்து போலீசார் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்து கொடியை கைப்பற்றினர். இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News