செய்திகள்

திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் பேரிகார்டுகள் மூலம் பாதைகள் திடீர் அடைப்பு: பயணிகள் கடும் பாதிப்பு

Published On 2016-09-16 13:28 GMT   |   Update On 2016-09-16 13:28 GMT
திருச்செந்தூர் ரெயில் நிலையத்தில் பேரிகார்டுகள் மூலம் பாதைகள் திடீரென அடைக்கப்பட்டதால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
திருச்செந்தூர்:

கர்நாடக மாநிலத்தில் தமிழர்கள் தாக்கப்படுவதற்கு  கண்டனம் தெரிவித்து தமிழகத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. திருச்செந்தூரில் பேருந்துநிலையம் அருகில் உள்ள கடைகள் இரும்பு ஆர்ச் பகுதிகளில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. ஒரு சில உணவு விடுதிகள், டீ கடைகள் மட்டும் திறந்திருந்தன.

பந்தையொட்டி ரெயில் நிலையத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பேரிகார்டுகள் அமைத்து  ரெயில் நிலையத்திற்குள் பயணிகள் செல்ல முடியாத வகையில்  பாதைகளை அடைத்து வைத்திருந்தனர்.

இதனால் வயதான பெரியவர்கள், நோயாளிகள்  மற்றும் ரெயில் நிலையத்திற்கு செல்லும் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களை போலீசார் அனுமதிக்காததினால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Similar News