செய்திகள்
புஷ்பலதாவின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புஷ்பலதாவின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்பாட்டம் செய்தனர்.
விருத்தாசலம்:
விருத்தாசலம் பூதாமூர் ஏனாதிமேடு கிராமத்தைச் சேர்ந்த நர்ஸ் புஷ்பலதா(21). தனசேகர்(22) என்பவர் காதலிக்குமாறு வலியுறுத்தி அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புஷ்பலதாவின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கக்கோரி விருத்தாசலம் பாலக்கரையில் ஆர்பாட்டம் செய்தனர். விருத்தாசலம் வட்ட செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார்.
வட்டக்குழு உறுப்பினர் சந்திரசேகரன், நகர செயலாளர் சிவஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஆறுமுகம், மாவட்டக்குழு உறுப்பினர் காமராஜ், வட்டக்குழு உறுப்பினர்கள் விஸ்வநாதன், கோவிந்தன், இளங்கோ, குமரகுரு, அமிர்தலிலிங்கம், அம்பேத்கர், அன்புச்செல்வி, நெல்சன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.