செய்திகள்

மதுராந்தகத்தில் லாரி மீது ஆட்டோ மோதல்: 3 பேர் பலி

Published On 2016-09-01 11:47 IST   |   Update On 2016-09-01 11:47:00 IST
மதுராந்தகத்தில் லாரி மீது ஆட்டோ மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மதுராந்தகம்:

மதுராந்தகம், வடக்கு பைபாஸ் சாலையில் இன்று காலை திருச்சி நோக்கி சரக்கு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அதில் டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர்.

முன்னால் சென்ற லாரியை முந்தி செல்ல முயன்ற போது திடீரென சரக்கு ஆட்டோ மோதியது.

இதில் சரக்கு ஆட்டோவின் முன்பகுதி நசுங்கியது. அதிலிருந்த டிரைவர் உள்பட 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். லாரிக்கு சேதம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் மதுராந்தகம் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

பலியான 3 பேர் பற்றிய விவரம் உடனடியாக தெரியவில்லை. ஒருவரிடம் மட்டும் செல்போன் இருந்தது. அதனை வைத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். பலியானவர்கள் சமயபுரம் பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

இந்த விபத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News