செய்திகள்
ஒர்க் ஷாப்பில் தூக்குப்போட்டு உரிமையாளர் தற்கொலை
பெருந்துறை அருகே வாழ்க்கையில் வெறுப்படைந்து ஒர்க் ஷாப் உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு:
பெருந்துறை அருகே உள்ள காஞ்சிகோவில் நரிப்பாளையத்தை சேர்நதவர் சங்கர் (வயது 29). இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சங்கர் பெருந்துறை ஈரோடு ரோட்டில் ஒர்க்ஷாப் நடத்தி வந்தார். இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து அவ்வப்போது தற்கொலை செய்ய முயற்சி செய்த வந்தாராம். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி ஒர்க்ஷாப்புக்கு வந்த சங்கர் அங்குள்ள மின் விசிறியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து அவரது மனைவி ரம்மியா (27) பெருந்துறை போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சிவகுமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.