செய்திகள்
பவானியில் வேன் தாறுமாறாக ஓடி ரோட்டோரம் கவிழ்ந்தது: 10 பேர் படுகாயம்
திருமண கோஷ்டியினர் சென்ற வேன் தாறுமாறாக ஓடி ரோட்டோரம் கவிழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயத்துடன் தப்பினர்.
பவானி:
பவானி தேவபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு நேற்று ஒரு வேன் புறப்பட்டு சென்றது. அங்கு நடக்கும் திருமணத்துக்காக 15 பேர் அந்த வேனில் சென்றனர்.
இந்த வேன் சித்தோடு அருகே செல்லும் போது ரோட்டின் குறுக்கே ஒரு இரு சக்கர வாகனம் சென்றது. இதன் மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் வேனை திருப்பினார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் தாறுமாறாக ஓடி ரோட்டின் ஓரத்தில் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த 10 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
இந்த விபத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் ஓடி சென்று வேனில் வந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.