செய்திகள்

ஆவடி அருகே நள்ளிரவில் திருட்டு மணல் கடத்திய லாரி உரிமையாளர் கைது

Published On 2016-08-19 06:47 GMT   |   Update On 2016-08-19 06:47 GMT
ஆவடி அருகே நள்ளிரவில் திருட்டு மணல் கடத்திய லாரி உரிமையாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருநின்றவூர்:

ஆவடியை அடுத்த பொத்தூர் ஏரியில் அடிக்கடி திருட்டு மணல் அள்ளுவதாக ஆவடி துணை போலீஸ் கமி‌ஷனர் சுதாகருக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து மணல் கடத்துபவர்களை தடுக்க சப்-இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று இரவு பொத்தூர் ஏரியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு 12 மணி அளவில் 2 லாரிகள், 2 டிராக்டர்களில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மணல் ஏற்றிக் கொண்டிருந்தனர்.

போலீசாரை பார்த்ததும் அனைவரும் தப்பி ஓடினர். அப்போது லாரி உரிமையாளர் ராஜேந்திரன் மட்டும் பிடிபட்டார். அவரை போலீசார் கைது செய்தனர். 2 லாரிகள், 2 டிராக்டர்கள், ஒரு ஜே.சி.பி. எந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய டிராக்டர் உரிமையாளர் சுரேஷ் உள்பட 2 பேரையும் தேடி வருகிறார்கள்.

Similar News