செய்திகள்

கோபியில் சபாநாயகரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2016-08-18 17:56 IST   |   Update On 2016-08-18 17:56:00 IST
கோபியில் சபாநாயகரை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் ஈடுபட்டனர். இதில் 300 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோபி:

தமிழக சட்டசபையில் நேற்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். எதிர் கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர்.

மேலும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஒரு வாரம் சஸ்பெண்டும் செய்யப்பட்டனர். இதையொட்டி தமிழக சபாநாயகரை கண்டித்து தி.மு.க.வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கோபி பஸ் நிலையம் அருகே இன்று தி.மு.க.வினர் சபாநாயகரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் நல்லசிவம் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்., ஜி.வி.வெங்கிடு சுப்பிரமணியம், ராஜேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சிறுவலூர் முருகன், (கோபி) சென்னிமலை (நம்பியூர்) மற்றும் கோபி நகர செயலாளர் நாகராஜன், கள்ளிப்பட்டி மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீசார் கைது செய்து பஸ்களில் அழைத்து சென்றனர். தி.மு.க.வினரின் போராட்டத்தால் கோபியில் இன்று பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Similar News