செய்திகள்

காஞ்சிக்கோயில்-துடுப்பதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2016-08-18 17:27 IST   |   Update On 2016-08-18 17:27:00 IST
காந்திநகர் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி காஞ்சிக்கோயில்-துடுப்பதியில் பகுதியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.
ஈரோடு:

காந்திநகர் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதையொட்டி நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதியில் மின்சாரம் இருக்காது.

காஞ்சிக்கோயில், பள்ளப்பாளையம், கவுண்டம் பாளையம், கரட்டுப்பாளையம், சின்னியம் பாளையம், அய்யன்வலசு, பெருமா பாளையம், முள்ளம்பட்டி, ஓலப்பானையம், கந்தம் பாளையம் பிரிவு, சாமிக்கவுண்டன் பாளையம், வேட்டை பெரியாம்பாளையம், காந்திநகர், நடுவலசு, கருக்கம்பாளையம்.

துடுப்பதி, பொன்னாண்டா வலசு, கொளத்தான்வலசு, சூரியம் பாளையம், பெத்தாம் பாளையம், இளையாம் பாளையம், ஓசப்பட்டி, மாதநாயக்கன்பாளையம், சாணார் பாளையம், தீர்த்தம் பாளையம், சமாதானபுரம், சீரங்ககவுண்டம் பாளையம், பாலக்கரை, தொட்டியனூர் மற்றும் கோயில் காட்டுவலசு.

இத்தகவலை ஈரோடு மின் செயற்பொறியாளர் சுப்ரமணியன் தெரிவித்தார்.

Similar News