செய்திகள்
இளையான்குடி அருகே கணவரின் குடிப்பழக்கத்தால் இளம்பெண் தூக்கில் தொங்கினார்
கணவரின் குடிப்பழக்கத்தால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார்.
சிவகங்கை:
இளையான்குடி தாலுகா சங்க மங்கலத்தை சேர்ந்தவர் கலா (வயது 28). இவருக்கும் மேலத்துறையூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி ரஜினிகாந்த் என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில், ரஜினிகாந்த் மது பழக்கத்திற்கு அடிமையானார். அதனை கைவிடுமாறு கலா பலமுறை வலியுறுத்தியும் அவர் கேட்கவில்லை.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த கலா, வீட்டிற்குள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கலாவின் தந்தை சஞ்சய் இளையான்குடி போலீசில் புகார் செய்தார்.
இதன்பேரில் சிவகங்கை காவல் துணை கண்காணிப்பாளர் வனிதா விசாரணை நடத்தி வருகிறார்.