செய்திகள்

திருப்போரூரில் பேராசிரியர் வீட்டில் வெள்ளி பொருட்கள், லேப்டாப் கொள்ளை

Published On 2016-07-25 12:06 IST   |   Update On 2016-07-25 12:06:00 IST
திருப்போரூரில் பேராசிரியர் வீட்டில் வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப்பை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
திருப்போரூர்:

திருப்போரூர் வேண்டவ ராசியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் தனஞ்செயன். தனியார் என்ஜினியர் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். இன்று காலை அவர் திரும்பி வந்த போது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டி இருந்தது.

சந்தேகம் அடைந்த அவர் வீட்டின் பின்பக்கம் சென்று பார்த்த போது அங்கிருந்த கதவில் துளை போடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த வெள்ளி பொருட்கள், லேப் டாப்பை காணவில்லை. அவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரிந்தது. இதன் மதிப்பு ரூ. 1லட்சம் இருக்கும்.

வீட்டில் நகை-பணம் வைக்காததால் அவை தப்பியது. தனஞ்செயன் வெளியூர் சென்றிருப்பதை நோட்டமிட்டு மர்ம கும்பல் இந்த துணிகர செயலலில் ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து திருப்போரூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாணை நடத்தி வருகிறார்கள்.

Similar News