செய்திகள்
ஜெயங்கொண்டம் அருகே கார் கவிழ்ந்து 4பேர் காயம்
ஜெயங்கொண்டம் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் 4பேர் படுகாயம் அடைந்தனர்
ஜெயங்கொண்டம்:
கடலூர் மாவட்டம் கரைமேடு கிராமத்தை சேர்ந்தவர் வரதராஜன் மகன் உத்திரஞானம் (வயது 67). இவர் தனது குடும்பத்தினருடன் ராமேஸ்வரம் கோவிலுக்கு சென்று விட்டு காரில் திரும்பி ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது ஜெயங்கொண்டம் அருகே குரு வாலப்பர் கோவில் பகுதியில் செல்லும் போது குறுக்கே மாடு வந்தது. அப்போது கார் டிரைவரின் கட்டுபாட்டை இழந்து நிலை தடுமாறி கவிழ்ந்தது.
இதில் காரில் பயணம் செய்த உத்திரஞானம், சுமதி, கீதா, ஸ்ரீதர் ஆகியோர் படுகாயமடைந்து ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து ஜெயங்கொண்டம் சப் இன்ஸ்பெக்டர் நடேசன் வழக்கு பதிந்து கார் டிரைவர் கடலூர் மாவட்டம் சூப்பனஞ் சாவடியை சேர்ந்த ராமலிங்கம் மகன் ரஜினிகாந்த் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.