செய்திகள்

அரியலூரில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.5 லட்சம் கொள்ளை

Published On 2016-07-23 16:04 IST   |   Update On 2016-07-23 16:04:00 IST
அரியலூரில் எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர் வீட்டில் ரூ.5லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர்:

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ஜாலிகான் (வயது 40). இவர் அரியலூர் கயிலாசநாதர் கோவில் தெருவில் எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வருகிறார். இதற்காக அரியலூர் வண்டிக்கார தெருவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஜாலிகான் அவரது குடும்பத்தினருடன் ராஜஸ்தான் சென்றார்.

இந்நிலையில் ஜாலிகானின் தம்பி இக்பால் (35) கடையை திறப்பதற்காக இன்று காலை அரியலூர் வந்தார். வீட்டிற்கு சென்று பார்த்த போது முன்பக்க கதவு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ மற்றும் டிராயர் உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.5லட்சம் பணம் கொள்ளை போயிருந்தது.

இது குறித்து இக்பால் அரியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News