செய்திகள்

ஈரோடு அருகே பாம்பு கடித்து மாணவி பலி

Published On 2016-07-22 16:45 IST   |   Update On 2016-07-22 16:46:00 IST
ஈரோடு அருகே பாம்பு கடித்து மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு:

நசியனூர் அருகே உள்ள வேட்டுவபாளையம் என்ற இடத்தை சேர்ந்தவர் மணி (வயது 46). தொழிலாளி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஜீவிதா (வயது 14), கவுசல்யா என்ற 2 மகள்கள் உள்ளனர், இதில் ஜீவிதா 6–ம் வகுப்பு படித்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு அவர்கள் அனைவரும் தோட்டத்து குடிசை வீட்டில் படுத்து தூங்கினர்.அப்போது அதிகாலையில் மாணவி ஜீவிதாவை ஒரு பாம்பு கடித்து விட்டது. இதனால் அவர் அலறினார்.

உடனே அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால் ஜீவிதா வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News