செய்திகள்

காஞ்சீபுரம் அருகே கார் மோதி விவசாயி பலி

Published On 2016-07-21 15:32 IST   |   Update On 2016-07-21 15:32:00 IST
காஞ்சீபுரம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த ஏரிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதன் (வயது70). விவசாயி.

நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழிக்கு சென்று விட்டு காஞ்சீபுரம் திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கீழம்பி சந்திப்பு பகுதியில் வந்தபோது பின்னால் வந்த கார் திடீரென மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வரதன் படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியில் வரதன் பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து பாலுசெட்டி சத்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்தனர்.

Similar News