செய்திகள்

விறகு பொறுக்க சென்ற பெண் யானை தாக்கி பலி

Published On 2016-07-21 12:16 IST   |   Update On 2016-07-21 12:16:00 IST
ஆசனூர் அருகே விறகு பொறுக்க சென்ற பெண் யானை தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி ஆசனூர் அருகே உள்ள அரேபாளையம் வன கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 50). இவரது மனைவி ஜடசி.

ஜடசியும் மேலும் 4 பெண்களும் சேர்ந்து அரே பாளையம் வனத்துக்குள் விறகு பொறுக்க சென்றனர்.

மதியம் வனத்துக்குள் புகுந்த இவர்கள் 5 பேரில் 4 பேர் திரும்பி வந்து விட்டனர். ஆனால் ஜடசி மட்டும் வரவில்லை.

இதனால் அந்த பெண்ணின் குடும்பத்தை சேர்ந்தவர்களும் ஊர்காரர் களும் அவரை தேடி காட்டுக்குள் நழைந்து தேடினர்.

அப்போது ஒற்றை யானை ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த யானை அருகே ஜடசி பிணமாக கிடந்தார். அந்த யானை அவரை தாக்கி கொன்றது தெரிய வந்தது.

பொதுமக்கள் அந்த யானை அருகே சென்றதால் அவர்களையும் அந்த யானை மிரட்டியது. இதனால் ஜடசி உடலை மீட்க முடிய வில்லை.

இதுபற்றி தகவல் கிடைத்ததும் ஆசனூர் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்களாலும் யானை தாக்கி பலியான ஜடேசி உடலை மீட்க முடியவில்லை.

தொடர்ந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News