செய்திகள்

ஈரோடு லாட்ஜில் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்த வாலிபர்

Published On 2016-07-20 17:26 IST   |   Update On 2016-07-20 17:26:00 IST
ஈரோடு லாட்ஜில் பிளேடால் கையை அறுத்து தற்கொலை செய்த கேரள வாலிபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் அரிதாஸ் (வயது 40). இவர் திருப்பூரில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் டைலராக வேலை பார்த்து வந்தார்.

நேற்று ஈரோடு வந்த இவர் இரவில் ரெயில் நிலையம் எதிரே உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கினார். இன்று காலை வெகு நேரமாகியும் அவர் தங்கி இருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் இன்டர்காமில் போன் செய்து பார்த்தனர்.

அப்போதும் அரிதாஸ் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகப்பட்ட லாட்ஜ் ஊழியர்கள் இது பற்றி ஈரோடு சூரம்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கதவை உடைத்து பார்த்த போது அரிதாஸ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் பிளேடால் தனது இடது கையை அறுத்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.

அரிதாசின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News