செய்திகள்
துரைப்பாக்கம் - கண்ணகி நகர் போலீஸ் நிலையத்தில் கைதி தப்பி ஓட்டம்
சென்னை துரைப்பாக்கம் அருகே கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பிய கைதியை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவான்மியூர்:
சென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகர் எழில்நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (34) ரவுடி. இவர் மீது வழிப்பறி, கொள்ளை, கஞ்சா உள்பட பல வழக்குகள் கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் உள்ளது.
இந்நிலையில் நேற்று காலை கஞ்சா விற்ற வழக்கில் சிவக்குமாரை போலீசார் கைது செய்து கண்ணகிநகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். விசாரணை நடத்தினர். பின்னர் மதிய உணவு வாங்கி கொடுத்தனர். மாலை 5 மணி அளவில் சிவக்குமார் தனக்கு பசிப்பதாக கூறினார். அப்போது கண்ணகிநகர் போலீஸ் நிலையத்தில் 2 போலீஸ்காரர்கள் மட்டுமே பணியில, இருந்தனர். அதில் ஒருவர் உணவு வாங்க வெளியே சென்று விட்டார் இதை பயன்படுத்தி சிவக்குமார் தப்பி ஓடிவிட்டார்.
இந்நிலையில் போலீஸ் நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய கைதியை போலீசார் தேடி வருகிறார்கள்.