செய்திகள்

திருப்போரூரில் லாரி மீது கார் மோதல்: வாலிபர் பலி

Published On 2016-07-20 13:43 IST   |   Update On 2016-07-20 13:43:00 IST
திருப்போரூரில் லாரி மீது கார் மோதலில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்போரூர்:

விழுப்புரம் மாவட்டம் பெரிய கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த அஜ்முகம்மது, அஜீஸ் உள்பட 9 பேர் காரில் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு வந்தனர். உறவினர் ஒருவரை வெளிநாட்டுக்கு வழி அனுப்ப வந்து கொண்டிருந்தனர்.

இன்று அதிகாலை 1.30 மணி அளவில் திருப்போரூர் ரவுண்டானா அருகே ஒரு வளைவில் திரும்பும் போது எதிரே வந்த டேங்கர் லாரி மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. அதிலிருந்தவர்கள் படுகாயம் அடைந்து அலறிதுடித்தனர்.

இதில் அஜிஸ் (17) சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தார். அக்கம் பக்கத்தினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

காருக்குள் சிக்கி இருந்த அஜீஸ் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர். வேகமாக காரை ஓட்டி வந்த டிரைவர் வளைவை கவனிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி மீது கார் மோதியது தெரியவந்தது. இது குறித்து திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறார்கள்.

Similar News