செய்திகள்

பம்மலில் நில நடுக்க பீதி

Published On 2016-07-20 13:06 IST   |   Update On 2016-07-20 13:06:00 IST
பல்லாவரத்தை அடுத்த பம்மலில் நேற்றிரவு 11.50 மணிக்கு திடீரென நில நடுக்க பீதி ஏற்பட்டுள்ளது.
தாம்பரம்:

பம்மல் நல்லதம்பி ரோட்டில் வசிக்கும் முருகன் என்பவர் நேற்றிரவு தூங்கி கொண்டிருந்த போது வீட்டில் இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்தன. இதனால் அவர் அலறியடித்து வெளியே ஒடி வந்து பீதியுடன் காணப்பட்டார். ஆனால் அந்த தெருவில் உள்ள மற்றவர்களுக்கு நிலநடுக்க பீதி தெரியவில்லை.

இதேபோல் பம்மல் டி.எல்.ரகுபதி காலனியை சேர்ந்த ஐ.டி. கம்பெனி ஊழியர் பிரவின் தனது வீட்டு மாடியில் தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென கட்டில் ஆடியதால் அலறியடித்து எழுந்தார். நிலநடுக்கம் போல் தெரிந்ததால் பொழிச்சலூர் கல்யாண் நகரில் உள்ள தனது நண்பர் லோகேசை போனில் தொடர்பு கொண்டார். அப்போது அவரும் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக தெரிவித்தார்.

இந்த பரபரப்பு பீதி நள்ளிரவு பம்மல் பகுதியில் வேகமாக பரவியதால் போலீசாரும் உஷாராக ஆங்காங்கே ரோந்து சென்றனர்.

ஆனால் இந்த நிலநடுக்கத்தை பல்லாவரம், பம்மல் அனகாபுத்தூர் பகுதிகளில் பெரும்பாலானோர் உணரவில்லை. வானிலை மையத்திலும் நிலநடுக்கம் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News