செய்திகள்
அரியலூர் அருகே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் மாறி சென்றதால் பரபரப்பு - 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதம்
அரியலூர் அருகே சிக்னலை தாண்டிய கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலால் சென்னை செல்லும் தென்மாவட்ட ரெயில்கள் 3 மணி நேரம் தாமதாக சென்றது.
செந்துறை:
தென் மாவட்டங்களில் இருந்து தினமும் சென்னைக்கு நெல்லை, கன்னியாகுமரி, அனந்தபுரி, பொதிகை, பாண்டியன், முத்துநகர் உள்ளிட்ட பல்வேறு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகிறது. இவை அவ்வப்போது சிக்னல் பிரச்சினை காரணமாக தாமதாக செல்வது வழக்கமான ஒன்றாகும்.
இந்த நிலையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று இரவு புறப்பட்டு சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தது. அரியலூரை அடுத்த ஆர்.எஸ்.மாத்தூர் ரெயில் நிலையம் அருகே வந்தபோது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி செல்லும் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயில் செல்வதற்காக சிக்னல் போடப்பட்டிருந்தது. சிக்னலுக்கு சுமார் 10 மீட்டர் முன்னதாகவே ரெயிலை நிறுத்த வேண்டும் என்பது விதிமுறை.
ஆனால் அதனை கவனிக்காத கன்னியாகுமரி என்ஜின் டிரைவர் சிக்னலை கடந்து மற்றொரு டிராக்கில் ரெயிலை இயக்கினார். அந்த டிராக்கானது தற்காலிகமாக ரெயிலை நிறுத்தி வைப்பதற்கான யார்டு பகுதியாகும். இதனால் சிக்னல் பிரச்சினை ஏற்பட்டது. அத்துடன் அந்த பகுதியில் மின்சாரம் இல்லாததால் எலக்ட்ரிக் என்ஜின் தானாக நின்றது.
மேலும் அந்த ரெயிலை பின்னோக்கி கொண்டுவர முடியாத சூழ்நிலையும் உருவானது.
இதையடுத்து அரியலூரில் இருந்து மாற்று என்ஜின் கொண்டுவரப்பட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பின்னோக்கி இழுக்கப்பட்டு மற்றொரு டிராக்கில் விடப்பட்டது. அதன்பின்னர் மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு வழிவிடப்பட்டது. தொடர்ந்து கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை புறப்பட்டு சென்றது. என்ஜின் டிரைவரும் மாற்றப்பட்டு வேறு டிரைவர் ரெயிலை இயக்கி சென்றார்.
இதன் காரணமாக சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த நெல்லை, அனந்தபுரி, முத்துநகர், மலைக்கோட்டை, பாண்டியன் உள்ளிட்ட 7 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. அவை அனைத்தும் சிக்னல் சரிசெய்யப்பட்டு சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. இதனால் பயணிகள் பெரிதும் அவதியடைந்தனர்.
இதற்கிடையே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் என்ஜின் டிரைவரின் கவனக்குறைவே இந்த பிரச்சினைக்கு காரணம் என்று கூறப்படுகிறது. மற்றொரு டிராக்கில் இயக்கப்பட்ட ரெயில் தொடர்ந்து வேகமாக சென்றிருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்.
எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்காக திருச்சியில் இருந்து அதிகாரிகள் ஆர்.எஸ்.மாத்தூர் சென்றுள்ளனர்.