செய்திகள்

ஆப்பக்கூடல் அருகே தனியார் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி பலி

Published On 2016-07-19 17:12 IST   |   Update On 2016-07-19 17:12:00 IST
ஆப்பக்கூடல் அருகே தனியார் நிறுவன ஊழியர் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் தண்ணீர் டேங்க் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 51) மனைவி பெயர் ஞானசுந்தரி இவர் ஈரோட்டில் உள்ள தனியார் பாய் நிறுவனத்தில் ஊழியராக பணி புரிந்தார்.

இன்று காலை ஞானசுந்தரி கடைக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்த குமாரசாமி டி.வியில் கேபிள் வயரை சொருகினார். இதில் எதிர்பாராத விதமாக ‘எர்த்’ ஆகி அவரை மின்சாரம் தாக்கியது. இதில் அவர் சத்தம் போட்டபடி கீழே மயங்கி விழுந்தார்.

இதை கண்ட அவரது மனைவி அக்கம் பக்கத்தினரை சத்தம் போட்டு வரவழைத்தார்.

அவர்கள் ஓடிவந்தனர். பிறகு 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்சு விரைந்து வந்தது. அதில் வந்தவர்கள் குமாரசாமியை பரிசோதித்த போது குமாரசாமி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானது தெரிய வந்தது.

இதுகுறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரித்து வருகிறார்கள். குமாரசாமி உடல் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பலியான குமாரசாமிக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் பெயர் ரேவதி (28) பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மற்றொரு மகள் யுவராணி திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார்.

Similar News