செய்திகள்
மதுராந்தகம் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி பலி
மதுராந்தகம் அருகே மின்சாரம் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி விவசாயி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுராந்தகம்:
மதுராந்தகத்தை அடுத்த புத்திரன்கோட்டையில் வசித்து வந்தவர் திருவேங்கடம் (வயது 50) விவசாயி.
இன்று காலை அவர் விவசாய நிலத்தில் உள்ள மின்மோட்டாரை இயக்க சுவிட்ச் போட்டார். அதிகாலை மழை பெய்து இருந்ததால் அதில் மின்கசிவு ஏற்பட்டு இருந்தது.
இதில் மின்சாரம் தாக்கி திருவேங்கடம் தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சூனாம்பேடில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி திருவேங்கடம் பரிதாபமாக இறந்தார்.