செய்திகள்

ஓடும் ரெயில்களில் பெண்களிடம் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது

Published On 2016-07-17 17:05 IST   |   Update On 2016-07-17 17:05:00 IST
ஓடும் ரெயில்களில் பெண்களிடம் கைவரிசை காட்டிய பிரபல கொள்ளையன் போலீஸ் ரோந்து பணியின் போது சிக்கினான்.

ஈரோடு:

ஈரோடு ரெயில் நிலையத்தில் நேற்று மாலை சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் ரெயில்வே போலீசார் விஜயகுமார், கிருஷ்ணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது சந்தேகம்படும் படியாக ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவன் ரெயில் கொள்ளையன் என தெரிய வந்தது. ஓடும் ரெயிலில் பெண்களிடம் நகைகள், செல்போன், பணத்தை திருடியதை ஒப்பு கொண்டான்.

இதுபற்றிய விவரம் வருமாறு:–

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம், செங் கோடகவுண்டன் பகுதியை சேர்ந்தவர் செந்தில்ராஜ்(வயது31). இவன் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கடந்த மாதம் கொச்சி வேலி எக்ஸ்பிரசில்பயணம் செய்த கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சினாபிஜி(42) என்ற பெண்ணிடம் ஈரோடு, காவிரி ஆர்.எஸ்.பகுதியில் ரெயில்வந்த போது அந்த ரெயிலுக்குள் புகுந்து அரை பவுன் தங்க நகை, விலை உயர்ந்த ஸ்மார்ட் போனை திருடி சென்றுள்ளான்.

இதே போன்று ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த சோபியா லில்லி(45) என்ற பெண்ணிட மும், காவிரி ஆர்.எஸ்.பகுதியில் ரெயில் வந்த போது ஸ்மார்ட்போன், 2 ஏ.டி.எம்.கார்டுகள், ரூ.8 ஆயிரம் பயணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான்.

இந்த இரண்டு வழக்கு களிலும் ரெயில்வே போலீ சார் வழக்கு பதிவு செய்து குற்றவாளியை தேடி வந்த னர்.இவன்தான் இந்த திருட்டை அரங்கேற்றி உள்ளான். செந்தில்ராஜிடம் இருந்து 2 விலை உயர்ந்த செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

செந்தில்ராஜை ரெயில்வே போலீசார் கைது செய்து அவனிடம் தீவிரவிசாரணை நடத்தி வருகிறார்கள். இவன் மீது ஈரோடு, கோயம்புதூர், சேலம், திருப்பூர் போன்ற மாவட்டங்களில் 28–க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News