இறைச்சி கூடங்களில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளார்களா? தொழிலாளர் துறையினர் ஆய்வு
ஈரோடு:
சென்னை தொழிலாளர் துறை முதன்மை செயலாளர் மற்றும் ஆணையர் அமுதா உத்தரவுப்படி கோவை தொழிலாளர் இணை ஆணையர் மாரிமுத்து அறிவுரைப்படி ஈரோடு மாவட்ட தொழிலாளர் ஆய்வாளர் மோகன் தலைமையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள இறைச்சி கூடங்களில் அதிரடி ஆய்வு நடத்தினர்.
இறைச்சி கூடங்களில் குழந்தை தொழிலாளர்கள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளார்களா? என்று சோதனை நடத்தினர்.
ஈரோடு, பவானி, பெருந் துறை, கோபி மற்றும் சத்தியமங்கலம் பகுதிகளில் உள்ள ஆடு, கோழி, மாட்டு இறைச்சி மற்றும் மீன் கடை களில் தொழிலாளர் துணை ஆய்வாளர்கள், தொழிலார் உதவி ஆய்வாளர்கள் இந்த அதிரடி சோதனையில் ஈடு பட்டனர்.
குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் ரூ.20 அயிரம் அபராதம் அல்லது ஒரு ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்படும் எனவும், குழந்தை தொழிலாளர்களை யாரும் பணியில் அமர்த்த கூடாது என்ற விழிப்புணர்வு வாசகமும் ஒட்டப்பட்டது.
இறைச்சி கூடங்களில் உள்ள முத்திரையிடப்படாத தராசுகளை வியாபாரிகள் உடனடியாக முத்திரை ஆய்வரிடம் முத்திரையிட்டு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தை குழந்தை தொழிலாளர்கள் யாரும் இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைத்து கடை நிறுவனங்களும், பொதுமக்களும் முன் வந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். யாரேனும் பணியில் அமர்த்தப்படுவது கண்டால் 1098 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் தொழிலாளர் ஆய்வாளர்க.ந.மோகன் கூறியுள்ளார்.