செய்திகள்

தாம்பரத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் தீயில் கருகி பலி

Published On 2016-07-16 14:23 IST   |   Update On 2016-07-16 14:23:00 IST
தாம்பரத்தில் அரசு ஊழியர் தீயில் கருகி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாம்பரம்:

கிழக்கு தாம்பரம் கணபதி புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கேசவலு. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவர் வீட்டின் அருகே ஒரு பிள்ளையார் கோவில் உள்ளது.

நேற்று மாலை கேசவலு சாமி கும்பிட கோவிலுக்கு சென்றார். பின்னர் கோவிலுக்கு முன்பு கற்பூரம் ஏற்றி சாமி கும்பிட்டார். அப்போது வேகமாக வீசிய காற்றால் கற்பூரத்தில் இருந்த தீ அவரது வேட்டியில் பட்டு தீ பிடித்து எரிந்தது. உடனே அவர் அலறினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.

பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இதுகுறித்து சேலையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News