செய்திகள்
ஈரோடு பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்தவர் பலி: போலீசார் விசாரணை
ஈரோடு பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்தவர் பலியானார். யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு பஸ் நிலையத்தில் நேற்று சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் மயங்கி கிடந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்சு மூலம் அவரை ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி மாலை பரிதாபமாக இறந்தார். அவரது உடல் ஈரோடு அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விபரம் உடனடியாக தெரிய வில்லை. அவர் சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். இது குறித்து ஈரோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.