செய்திகள்

கடலூரில் குளக்கரையில் கிடந்த சாமி சிலைகள் மீட்பு: அதிகாரிகள் விசாரணை

Published On 2016-07-13 16:18 IST   |   Update On 2016-07-13 16:18:00 IST
கடலூரில் குளக்கரையில் கிடந்த சாமி சிலைகளை அதிகாரிகள் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடலூர்:

கடலூர் அருகே தியாகவல்லிபுரம் பகுதியில் குளம் உள்ளது. இந்த குளத்தில் இன்று காலை சிறுவர்கள் குளித்து கொண்டிருந்தனர்.

அப்போது குளக்கரையில் ஒரு அம்மன் சிலை, ஒரு பெருமாள் சிலை, தட்சிணாமூர்த்தி சிலைகள் கிடந்தன.

இதைபார்த்த சிறுவர்கள் தியாகவல்லி ஊராட்சி தலைவர் முருகன், துணைத்தலைவர் மோகன சுந்தரம் ஆகியோரிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் கிராம நிர்வாக அதிகாரி லட்சுமிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வருவாய் துறை ஊழியர்கள் விரைந்து வந்தனர். சாமி சிலைகளை மீட்டு கடலூர் தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

மீட்கப்பட்ட சாமிசிலை கருங்கல்லால் ஆனது ஆகும். இந்த சிலையில் சில பகுதிகள் சேதமடைந்து உள்ளன. போலீசாருக்கு பயந்து சிலைகளை கொள்ளையர்கள் குளக்கரையில் விட்டு சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

இந்த சிலைகள் எந்த கோவிலில் இருந்து எடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News