செய்திகள்

கோபி அருகே வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2016-07-03 16:10 IST   |   Update On 2016-07-03 16:10:00 IST
கோபி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பரிதாப உயிரிழந்தார்.

கோபி:

கோபி அருகே உள்ள பிள்ளையார் கோவில்துறை பகுதியை சேர்ந்த 70 வயது மதிக்கத்தக்க முதியவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அந்த முதியவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

அருகில் இருந்தவர்கள் ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்து கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லபட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி முதியவர் பரிதாபமாக இறந்தார்.

இவர் யார்? எந்த ஊர்? என்பது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News