செய்திகள்

அரசு டவுன் பஸ் டயர் வெடித்ததால் பரபரப்பு: டிரைவரின் சாமர்த்தியத்தால் பயணிகள் தப்பினர்

Published On 2016-06-30 17:03 IST   |   Update On 2016-06-30 17:03:00 IST
பங்களா புதூர் அருகே டயர் வெடித்து நடுரோட்டில் ஓடிய அரசு பஸ்சை டிரைவரின் சாமர்த்தியத்தால் கட்டுப்படுத்தினர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபியில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி பங்களாபுதூர் வழியாக ஒரு டவுன் பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பங்களா புதூர் அருகே ஒரு தனியார் பாலிடெக்னிக் பிரிவில் பஸ்சை நிறுத்த டிரைவர் ‘‘பிரேக்’’ போட்டார். அப்போது அந்த பஸ்சின் முன்பக்க டயர் டியூப்புடன் படார் என்ற சத்தத்துடன் வெடித்தது. இந்த சத்தத்தை கேட்டு பஸ்சில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

டிரைவர் உஷாராகி பஸ்சை சாமர்த்தியமாக நிறுத்தினார். பஸ்சை நிறுத்தும்போது டயர் வெடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அதேசமயம் அந்த பஸ் ஓடிக் கொண்டிருக்கும்போது வெடித்திருந்தால் பெரும் விபரீதம் நடந்திருக்க கூடும் என அப்பகுதி மக்கள் பரபரப்பாக பேசிக் கொண்டனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News