செய்திகள்

சைக்கிள் மீது லாரி மோதி முதியவர் பலி

Published On 2016-06-30 17:01 IST   |   Update On 2016-06-30 17:01:00 IST
சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு:

சென்னிமலை கென்னடி வீதியை சேர்ந்தவர் வடிவேல் (வயது 52). இவரது மனைவி கமலவேணி(49).

வடிவேல் சம்பவத்தன்று சென்னிமலை-காங்கேயம் இந்தியன் பெட்ரோல் பங்க் அருகில் ரோட்டோரமாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்னாடி வந்த லாரி ஒன்று எதிர்பாராத வகையில் வடிவேல் சென்ற சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் இடுப்பு, கால்களில் பலத்த அடிப்பட்டு ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.

அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புவன்ஸ் மூலம் சென்னிமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கபட்டார்.

அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கபட்டு வந்தது. எனினும் சிகிச்சை பவனின்றி வடிவேல் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். வடிவேல் உடலை அவரது மனைவி பார்த்து கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News