செய்திகள்

கிண்டியில் ஆட்டோவில் சுற்றிய வழிப்பறி கும்பல் சிக்கியது

Published On 2016-06-30 14:58 IST   |   Update On 2016-06-30 14:58:00 IST
கிண்டியில் வாகன சோதனையின் போது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்:

கிண்டி நேரு நகரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது ஒரு ஆட்டோவில் 5 பேர் வந்தனர். அப்போது ஆட்டோவை போலீசார் நிறுத்திய போது ஒருவன் தப்பி ஓடினான். மற்ற 4 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர்.

ஆட்டோவில் சோதனையிட்டபோது கத்தி போன்ற ஆயுதங்கள் இருந்தன. இவர்கள் 4 பேரும் வழிப்பறி கொள்ளையர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் கிண்டி நேரு நகரைச் சேர்ந்த சரத்குமார், மணி, குபேந்திரன், சதீஷ் என்பது தெரிய வந்தது. தப்பி ஓடிய மாதவனை தேடி வருகிறார்கள். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மகிமைவீரன் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News