செய்திகள்

10–ம் வகுப்பு பொதுத்தேர்வில் மவுண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி மாநில, மாவட்ட அளவில் சாதனை

Published On 2016-05-26 18:19 IST   |   Update On 2016-05-26 18:19:00 IST
10–ம் வகுப்பு பொதுத்தேர்வில் மவுண்ட் சீயோன் மெட்ரிக் பள்ளி மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அபார சாதனை படைத்துள்ளது.

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் மெட்ரிக்குலேஷன் மேல் நிலைப்பள்ளியின் மாணவர்கள் நடந்து முடிந்த 2016 ஆம் கல்வியாண்டிற்கான 10–ம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அபார சாதனை படைத்துள்ளனர்.

நடந்து முடிந்த 2016 – ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மெளண்ட் சீயோன் பள்ளி 300–க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்டு தேர்வு எழுதி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.

மாணவி ஆலின் அமலா, சார்லட் பெஸ்ஸி சகாயா, சு.விக்னேஷ்வரன் ஆகிய மூன்று மாணவர்கள் 500–க்கு 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடமும், மாவட்ட அளவில் முதலிடமும் பெற்று அபார சாதனை படைத்துள்ளனர். விக்னேஷ் என்ற மாணவன் 500–க்கு 496 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடத்தையும், இந்துமதி, கார்த்திகா, ஜனோபியா பேகம், ஐஸ்வர்யா, விஷால் சாம் பிரான் சிஸ் ஆகியோர் 500–க்கு 495 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் மூன்றா மிடத்தையும் தட்டிச் சென்றனர்.

மேலும்,பாட வாரியாக ஆங்கிலத்தில் ஒரு மாணவரும், கணிதம் பாடத்தில் 31 மாணவர்களும், அறிவியல் பாடத்தில் 35 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 62 மாணவர்களும் என்ற கணக்கில் மாவட்டத்திலேயே அதிகமான எண்ணிக்கையில் 100–க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்து, பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.

பள்ளியில் 490 மதிப் பெண்களுக்கு மேல் 24 பேரும், 480 மதிப்பெண்களுக்கு மேல் 98 பேரும், 470 மதிப்பெண்களுக்கு மேல் 119 பேரும், 460 மதிப்பெண்களுக்கு மேல் 152 பேரும், 450 மதிப் பெண்களுக்கு மேல் 189 பேரும் மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் அரும் பெரும் சாதனைப் படைத்த மாணவர்களைப் பள்ளியின் முதுநிலை முதல்வர் டாக்டர். ஜோனத்தன் வெகுவாகப் பாராட்டினார்.

Similar News