செய்திகள்

கமுதி அருகே பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை: கணவன் உள்பட 5 பேர் மீது வழக்கு

Published On 2016-05-25 14:28 IST   |   Update On 2016-05-25 14:28:00 IST
கமுதி அருகே திருமணம் முடிந்து 7 ஆண்டுகள் கழித்து வரதட்சணை கெடுமை செய்ததாக கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கமுதி:

ராமநாதபுரம மாவட்டம், கமுதி போலீஸ் சரகம் முதல் நாட்டைச் சேர்ந்த சுந்தரம் மகன் முத்துக்குமாரநாதன் (வயது 37) இவர் 7 ஆண்டுகளுக்கு முன்பு கவிதா (32) என்ற பெண்ணை திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் அதிகமான நகைகள் வரதட்சணை வாங்கி வரும்படி மனைவியை, கணவர் கொடுமைப் படுத்தியுள்ளார். இதற்கு கணவரின் குடும்பத்தினர் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கமுதி மகளிர் போலீசில் கவிதா புகார் செய்தார். இதையடுத்து போலீஸ் ஏ.டி.எஸ்.பி. ஷேக்முக்சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் முத்துக்குமாரநாதன், இவரது பெற்றோர் சுந்தரம், ராஜம்மாள், அண்ணன் செல்லச்சாமி, இவரது மனைவி தமிழரசி ஆகியோர் மீது இன்ஸ்பெக்டர் முருகன், சப்–இன்ஸ்பெக்டர்கள் முருகன், ஜான்சிராணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News