செய்திகள்
டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது
புதுக்கோட்டை அருகே டாஸ்மாக் பார் ஊழியரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை அருகே உள்ள அடப்பகாரசத்திரம் என்ற இடத்தில் டாஸ்மாக் பார் உள்ளது. இந்த பாரில் சத்தியமங்கலத்தை சேர்ந்த ராமசாமி (வயது 45) என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை திருவப்பூரை சேர்ந்த சுப்ரமணியன் (45), வெள்ளைசாமி(31) ஆகிய இருவரும் அந்த டாஸ்மாக் பாருக்கு மது அருந்த வந்தனர். பின்னர் அவர்கள் வாங்கி சாப்பிட்ட தின்பண்டங்களுக்கான பணத்தை ராமசாமி கேட்டார். அதற்கு 2 பேரும் பணம் தர மறுத்தனர். இதனால் அவர்கள் 3 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது மதுபோதையில் இருந்த சுப்பிரமணியனும், வெள்ளைசாமியும் சேர்ந்து ராமசாமியை தாக்கினர். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசில் ராமசாமி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்ரமணியன், வெள்ளைசாமி ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.