செய்திகள்

பட்டாசு ஆலை வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு - உரிமையாளர்கள் உள்பட 3 பேர் மீது வழக்கு

Published On 2016-05-22 10:21 IST   |   Update On 2016-05-22 10:21:00 IST
பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் பலியானது தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் உள் பட 3 பேர் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் :

பட்டாசு ஆலை விபத்தில் 2 பேர் பலியானது தொடர்பாக ஆலை உரிமையாளர்கள் உள் பட 3 பேர் மீது போலீ சார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சிவகாசி அருகே உள்ள டி.மானகசேரியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அங்கு வேலை பார்த்த இருளப்பன் (வயது 50), லோகேஷ் (35) ஆகியோர் பலியானார்கள்.

மேலும் கதிரேசன், ஆறு முகக்கனி, சந்தானம், முத்தம்மாள் ஆகியோர் காயம் அடைந்து சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து தொடர்பாக ஆறுமுகக்கனி புகாரின் பேரில் மல்லிபோலீசார் விசாரனை நடத்தினர். இதுதொடர்பாக ஆலை உரிமையாளர்கள் காசி ராஜன், காளிராஜ், கணக்குப் பிள்ளை ஸ்ரீராம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Similar News