செய்திகள்

புதுக்கோட்டை அருகே ஆண் குழந்தை கொலை

Published On 2016-05-21 12:43 IST   |   Update On 2016-05-21 12:43:00 IST
புதுக்கோட்டை தலை துண்டித்து கிடந்த ஆண் குழந்தை நரபலி கொடுக்கப்பட்டதா என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

கீரனூர்:

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பஸ் நிலையத்தில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் வழியில் பாழ டைந்த கட்டிடம் உள்ளது. நேற்று அந்த கட்டிடத்தை சுற்றியுள்ள முட்புதரில் ஒரு பெரிய துணி பை கிடந்தது. அதிலிருந்து துர்நாற்றம் வீசிக் கொண்டே இருந்தது.

இதையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் அருகில் சென்று பார்த்த போது, அந்த பையில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிறந்து 2 நாட்களே ஆன ஒரு ஆண் குழந்தை உடல் இருந்தது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து கீரனூர் போலீசா ருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத் திற்கு போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். பின்னர் அந்த குழந்தையின் உடல் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் புதைக்கப்பட்டது.

அந்த குழந்தையின் உடல் அங்கு எப்படி வந்தது? தவறான முறையில் பெற்றெடுத்த தாய் குழந்தையை கொன்று வீசினாரா? அல்லது நரபலி கொடுக்கப்பட்டதா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News