செய்திகள்

விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய உதயசூரியனுக்கு ஒட்டு போடுங்கள்: தி.மு.க. வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2016-05-07 16:18 IST   |   Update On 2016-05-07 16:18:00 IST
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருச்செந்தூர் நகரப்பகுதி, காந்திபுரம், கிருஷ்ணாநகர், பள்ளத்தூர், தளவாய்புரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட திருச்செந்தூர் நகரப்பகுதி, காந்திபுரம், கிருஷ்ணாநகர், பள்ளத்தூர், தளவாய்புரம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். காந்திபுரம் பகுதி மக்கள் பட்டாசுகள் வெடித்து, தாரை தப்பட்டை முழங்க அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது பேசியதாவது:-

தொகுதி மக்கள் என்னை எப்போதும் சந்திக்கலாம். நான் உங்களோடு உங்களாக இருந்து எப்போதும் உங்களுக்காக உழைக்க மீண்டும் ஒரு வாய்ப்பு தாருங்கள். நான் உங்கள் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்றி தருவேன். மதுவின் பிடியில் சிக்கியிருக்கும் இந்த தலைமுறையினரை மட்டுமல்லாமல் வருங்கால சந்ததியினரையும் மதுவிலிருந்து காப்பாற்றி தள்ளாடாத தமிழகமாக திகழ ஒரே வழி பூரண மதுவிலக்கு கொள்கைதான்.

தமிழ்நாட்டில் மதுகடைகளே இல்லாத நிலை இருந்தால்தான் வருங்கால தலைமுறையினரை மதுவிலிருந்து காக்கமுடியும் அது உங்கள் கையில்தான் உள்ளது. அதற்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து கருனாநிதியை முதலமைச்சராக்க வேண்டும் கலைஞர் முதல் அமைச்சர் ஆன உடன் முதல் கையெழுத்தே மதுக்கடைகளை மூடுவதுதான்.

மேலும் விவசாயிகள் தங்கள் விவசாய பொருட்களுக்கு விலையில்லாமலும் வங்கிகளில் வாங்கிய கடன்களை அடைக்க முடியாமல் தவிக்கின்றனர். அதற்காக வங்கியில் விவசாயிகள் பெற்ற விவசாய கடனை தள்ளுபடி செய்வார். மேலும் உங்கள் பிள்ளைகளின் உயர்கல்விக்கு நீங்கள் பெற்ற கடனையும் கலைஞர் தள்ளுபடி செய்வார். எனவே நீங்கள் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுங்கள் இவ்வாறு பேசினார். பிரசாரத்தில் திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ், வக்கீல் கிருபாகரன், பெத்தான் முருகன், காந்திபுரம் வார்டு செயலாளர் ராஜேந்திரன், ஒன்றிய பிரதிநிதி மணிராஜ், ராமர், லெட்சுமணன், உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Similar News