செய்திகள்

பெண்ணாடம் அருகே ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவி தற்கொலை

Published On 2016-04-25 10:09 IST   |   Update On 2016-04-25 10:08:00 IST
பெண்ணாடம் அருகே அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 2–ம் ஆண்டு படித்து வந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்

பெண்ணாடம் :

பெண்ணாடம் அருகே உள்ள துறையூர் காலனி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 40), விவசாயி. இவரது மனைவி வளர்மதி (39). இவர்களது மகள் அன்பழகி (20).

இவர் வடலூரில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 2–ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் அவர் வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வந்தார்.

அண்ணாதுரைக்கும் அவரது மனைவி வளர்மதிக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினமும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதை பார்த்த அன்பழகி மனமுடைந்தார். தொடர்ந்து தாயும், தந்தையும் சண்டைபோடுகிறார்களே என்று மனம் வருந்தினார்.

இந்த நிலையில் அண்ணாதுரையும், வளர்மதியும் வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டனர். அன்பழகி மட்டும் வீட்டில் இருந்தார். அப்போது அவர் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அன்பழகிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பெண்ணாடம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.




Similar News