செய்திகள்

வேதாரண்யம் அருகே வாகனம் மோதி முதியவர் பலி

Published On 2016-04-10 16:17 IST   |   Update On 2016-04-10 16:17:00 IST
வேதாரண்யம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியானார்.

வேதாரண்யம்:

வேதாரண்யம் தாலுகா வாய்மேடு காவல் சரகம் வாய்மேடு உதயதேவன்காடு கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரேசன்(வயது86). இவர் நேற்று மதியம் வேதாரண்யம்– பட்டுக்கோட்டை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தபோது சுந்தரேசன் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு பேராடிக் கொண்டிருந்தார்.

இதையடுத்து அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு இன்ஸ்பெக்டர் சிவதாஸ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News