செய்திகள்
தலைஞாயிறு அருகே விவசாயி தற்கொலை
தலைஞாயிறு அருகே குடும்ப பிரச்சினை காரணமாக விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் தலைஞாயிறு அருகில் உள்ள ஒடியன் குளத்தை சேர்ந்தவர் காத்தையன் (வயது 70) விவசாயி. இவர் திருமாளம் அய்யனார் கோவிலில் விஷம் குடித்து இறந்து கிடந்தார்.
இது பற்றி கிராம நிர்வாக அதிகாரி தமிழ்செல்வம் தலைஞாயிறு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சிவ வடிவேல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இதில் அவர் குடும்ப பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.