செய்திகள்

சீர்காழி அருகே பஸ் பயணியிடம் 8 கிலோ வெள்ளி பறிமுதல்

Published On 2016-04-08 17:36 IST   |   Update On 2016-04-08 17:36:00 IST
சீர்காழி அருகே பஸ்சில் நடத்திய வாகன சோதனையில் 8 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சூரக்காட்டில் தேர்தல் பறக்கும் படை தனி தாசில்தார் திருமாறன் தலைமையில் சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் நாகராஜ், ஏட்டுகள் செந்தில் குமார், செல்வேந்திரன், ஸ்ரீதர் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது காரைக்காலில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மதுரையை சேர்ந்த பாலமுருகன் பையில் 8 கிலோ 99 கிராம் வெள்ளி பொருட்கள் இருந்தது. அவரிடம் விசாரித்த போது வெள்ளி பொருட்கள் கொண்டு வருவதற்காக உரிய ஆவணங்கள் இல்லை.

இதனை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இந்த வெள்ளி பொருட்களை சீர்காழி சட்ட மன்ற தேர்தல் நடத்தும் அலுவலர் தேன் மொழி, தேர்தல் நடத்தும் துணை அலுவலரும், தாசில்தாருமான சண்முகத்திடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சத்து 38 ஆயிரம் ஆகும்.

Similar News