செய்திகள்

நாகையில் கஞ்சா விற்றவர் கைது

Published On 2016-04-07 16:21 IST   |   Update On 2016-04-07 16:23:00 IST
நாகையில் கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாகப்பட்டினம்:

நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த முருகையா மகன் ஆனந்த் (வயது–38). இவர் தாமரைபுலம் தென்கரையில் கஞ்சா விற்பனை செய்தார். அவரை அந்த வழியாக ரோந்து சென்ற வெளிபாளையம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் பிடித்து அவர் வைத்து இருந்த 1½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தார்.

மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து ஆனந்தை கைது செய்தார்.

Similar News