செய்திகள்
பொன்னேரிக்கரை பகுதியில் தடைசெய்யப்பட்ட புகையிலை எடுத்து வந்த மினி லாரி பறிமுதல் செய்யப்பட்டதை படத்தில் காணலாம்

காஞ்சீபுரம் அருகே ஆட்டோவில் கடத்திய 30 மூட்டை புகையிலை பறிமுதல்

Published On 2016-04-07 12:00 IST   |   Update On 2016-04-07 12:01:00 IST
காஞ்சீபுரம் அருகே ஆட்டோவில் கடத்திய 30 மூட்டை புகையிலை பறக்கும்படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

காஞ்சீபுரம்:

காஞ்சீபுரத்தை அடுத்த பொன்னேரிக்கரை பகுதியில் இன்று காலை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தாசில்தார் கற்பகம் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சென்னையில் இருந்து வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் இருந்த மூட்டைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை இருப்பது தெரிந்தது.

மொத்தம் 30 மூட்டைகளில் புகையிலை இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ஆட்டோவில் இருந்த டிரைவரை பிடித்து காஞ்சீபுரம் தாலுக்கா போலீசில் ஒப்படைத்தனர்.

புகையிலை எங்கிருந்து யாருக்கு கடத்தப்பட்டது என்பது குறித்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

Similar News