செய்திகள்

சீர்காழி அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2016-04-04 16:46 IST   |   Update On 2016-04-04 16:47:00 IST
சீர்காழி அருகே தொழிலாளி தற்கொலை போலீசார் விசாரணை

சீர்காழி:

சீர்காழி அருகே உள்ள மகேந்திரபள்ளி சுப்பராயபுரத்தை சேர்ந்தவர் அறிவழகன் (38) தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.

நேற்று வீட்டில் தனியாக இருந்த அவர் உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் கருகிய அவர் புதுச்சேரி ஜிப்மர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார்.

இது குறித்து புதுப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News