உள்ளூர் செய்திகள்

நாகரில் கடன் அட்டை மூலம் பெண்ணிடம் பணம் மோசடி செய்த உறவினர் உள்பட 2 பேர் கைது

Published On 2022-07-20 07:19 GMT   |   Update On 2022-07-20 07:19 GMT
  • மர்மநபர்கள் எனது கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் வாங்கி பண மோசடி செய்தது தெரியவந்தது
  • சிவா மற்றும் சரவணன் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

நாகர்கோவில் :

வில்லுக்குறி அருகே சரல்விளை பகுதியை சேர்ந்த அய்யப்பன் மனைவி ஜெயக்குமாரி (வயது 43). இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சைபர் கரைம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:-

நானும் (ஜெயக்குமாரி) எனது உறவினரான வில்லுக்குறி பகுதியை சேர்ந்த சிவா (26) என்பவரை அழைத்துக் கொண்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு கடைக்கு சென்று தனியார் நிதி நிறுவன கடன் அட்டை(இ.எம்.ஐ.கார்டு) மூலம் ஒரு செல்போன் வாங்கினேன். பின்னர் தனியார் நிதி நிறுவனத்தில் இருந்து நீங்கள் ரூ.22 ஆயிரத்துக்கு ஒரு ஜவுளிக்கடையில் துணி எடுத்ததாகவும், அதற்கான கட்டணத்தை கடந்த 2 மாதங்களாக செலுத்தவில்லை என தெரிவித்தனர். ஆனால் நானோ கடன் அட்டை மூலம் துணிக்கடையில் எந்த ஒரு துணியும் எடுக்கவில்லை. மர்மநபர்கள் எனது கடன் அட்டையை பயன்படுத்தி பொருட்கள் வாங்கி பண மோசடி செய்தது தெரியவந்தது. எனவே சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் அட்டை மூலம் பண மோசடி செய்தவர்கள் பற்றி விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கடன் அட்டை மூலம் பெண்ணிடம் மோசடி செய்தது அவரது உறவினர் சிவா மற்றும் அவரது நண்பர் புத்தேரியைச் சேர்ந்த சரவணன்(26) என்பதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து சிவா மற்றும் சரவணன் ஆகியோரை சைபர் கிரைம் போலீசார் நேற்று கைது செய்தனர்.

Tags:    

Similar News