உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளை தாக்கிய 2 பேர் கைது

Published On 2022-11-03 12:03 IST   |   Update On 2022-11-03 12:03:00 IST
  • கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற வாலிபர்களை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியது.
  • கொடை க்கானல் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் 2 பேரை கைது செய்தனர்.

கொடைக்கானல்:

மதுரை நாகமலைப்பு துக்கோட்ைடயை சேர்ந்த விருமாண்டி மகன்கள் அஜித்(24), அஜய்(22) ஆகியோர் நண்பர் சஞ்சய்(21) என்பவருடன் மோட்டார் சைக்கிளில் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். லாஸ்காட் சாலை பகுதியில் சென்றபோது ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது.

இதில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிரச்சினை முற்றிய நிலையில் அந்த கும்பல் வாலிபர்களை கடுமையாக தாக்கினர். இதில் காயமடைந்த 3 பேரும் கொைடக்கானல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க ப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து கொடை க்கானல் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து குண சீலன்(41), எட்வர்ட்ராஜா(41) ஆகியோரை கைது செய்த னர். மேலும் இதுதொடர்பாக 5 பேரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News