15 வட்டாட்சியர்கள் பணியிட மாற்றம்
- நிர்வாக நலன் கருதி பணிமாறுதல் மற்றும் பணி நியமனம் வழங்கி ஆணையிடப்படுகிறது.
- ஓசூர் தனி வட்டாட்சியர் சண்முகம் ஓசூர் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி கலெக்டர் தீபக் ஜேக்கப் வெளியிட்டுள்ள பணியிட மாறுதல் தொடர்பான செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய் அலகில் வட்டாட்சியர் நிலையில் நிர்வாக நலன் கருதி பணிமாறுதல் மற்றும் பணி நியமனம் வழங்கி ஆணையிடப்படுகிறது.
அதன்படி சூளகிரி சிப்காட் நிலை 4 தனி வட்டாட்சியர் முருகேசன் ஓசூர் தனி வட்டாட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி தனி வட்டாட்சியர் ரமேஷ்பாபு சூளகிரி தனி வட்டாட்சியராகவும், ஓசூர் தனி வட்டாட்சியர் சுப்பிரமணி ஓசூர் வட்டாட்சியராகவும், ஓசூர் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துபாண்டி ஓசூர் நிலா வரி திட்ட தனி வட்டாட்சியராகவும், ஓசூர் தனி வட்டாட்சியர் சண்முகம் ஓசூர் சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் டாஸ்மாக் துணை மேலாளர் சின்னசாமி கிருஷ்ணகிரி தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. தனி வட்டாட்சியராகவும், இப்பணியில் இருந்த கிருஷ்ணமூர்த்தி அஞ்செட்டி தனி வட்டாட்சியராகவும், அஞ்செட்டி தனி வட்டாட்சியராக இருந்த பூவிதன் கிருஷ்ணகிரி நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியராகவும், அஞ்செட்டி வட்டாட்சியர் தேன்மொழி போச்சம்பள்ளி வட்டாட்சியராகவும், பர்கூர் வட்டாட்சியர் பன்னீர் செல்வி சூளகிரி வட்டாட்சியராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல சூளகிரி வட்டாட்சியர் அனிதா அஞ்செட்டி வட்டாட்சியராகவும், போச்சம்பள்ளி வட்டாட்சியர் திலகம் பர்கூர் வட்டாட்சியராகவும், ஊத்தங்கரை வட்டாட்சியர் கோவிந்தராஜ் கிருஷ்ணகிரி தனி வட்டாட்சியராகவும், வட்டாட்சியர் பயிற்சி பெற்று வரும் திருமலைராஜன் பயிற்சி முடித்தவுடன் ஊத்தங்கரை வட்டாட்சியராகவும், சூளகிரி சிப்காட் நிலை 4 அலகு 5 தனி வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி சிப்காட் நிலை 4 அலகு 1 தனி வட்டாட்சியராக கூடுதல் பொறுப்பு ஏற்கிறார்.
இவ்வாறு கிருஷ்ணகிரி கலெக்டர் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.