உள்ளூர் செய்திகள்

நெல்லை சந்திப்பு ம.தி.தா. இந்து மேல்நிலைப் பள்ளியில் தேர்வு எழுதியவர்களை படத்தில் காணலாம்.

நெல்லையில் 10 மையங்களில் குரூப்-8 தேர்வை 1,294 பேர் எழுதினர் - விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேர் 'ஆப்சென்ட்'

Published On 2022-09-11 09:21 GMT   |   Update On 2022-09-11 09:21 GMT
  • கோவில் செயல் அலுவலர் நிலை 4-க்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.
  • விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

நெல்லை:

தமிழ்நாடு அரசு பணி யாளர் தேர்வாணையம் சார்பில் குரூப்-8 பணியில் அடங்கிய கோவில் செயல் அலுவலர் நிலை 4-க்கான எழுத்து தேர்வு இன்று நடைபெற்றது.

காலை, மாலை என இரு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்வை எழுதுவதற் காக 2,576 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.

இந்த தேர்வு நெல்லை மாவட்டத்தில் இன்று நெல்லை சந்திப்பில் உள்ள ம.தி.தா. இந்து கல்லூரி மேல்நிலைப்பள்ளி, வண்ணார்பேட்டை விவே கானந்தா வித்தி யாஷ்ரம் மேல்நிலைப்பள்ளி, கல்லணை மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டவுன் சாப்டர் மேல்நிலைப்பள்ளி உட்பட 10 மையங்களில் இன்று காலை தொடங்கியது.

தேர்வை 1,294 பேர் மட்டுமே எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 50 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேர்வை தாசில்தார் மற்றும் துணை தாசில் தார் நிலையில் 3 சுற்றுக்குழு அலுவலர்கள் கண்காணித் தனர். தேர்வு மையங்கள் முழுவதும் வீடியோபதிவு செய்யப்பட்டது.

மேலும் கலெக்டர் விஷ்ணு உத்தரவின்பேரில் தேர்வு மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது. இதேபோல தேர்வு மையங்களுக்கு கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டது.

Tags:    

Similar News